Colombo (News 1st) தொழிற்சங்க சந்தாவினை விரைவில் முற்றாக நிறுத்துவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இன்று சபையில் தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது,
எங்கள் தொழிற்சங்கம் மாத்திரம் தான் சந்தா வாங்குவதில்லை. எதிர்த்தரப்பில் மலையக மக்கள் சார்ந்த பிரதிநிதிகள் நிறைய பேர் இருக்கின்றார்கள். எல்லா தொழிற்சங்கமும் சந்தா வாங்குகின்றது. சந்தா வாங்குவது தப்பில்லை. ஆனால், சந்தா வாங்கிவிட்டு தொழிலாளர்களிடம் முகம் கொடுக்காமல் இருப்பது தான் தவறு. கொரொனா முதல் தடவை இலங்கைக்கு வருந்த போது சந்தா பணத்தை நிறுத்தியது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தான். சந்தா பணத்தை முற்றாக நிறுத்துவது தொடர்பில் நாங்கள் அறிவித்துள்ளோம். கட்டாயம் நாங்கள் நிறுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது