ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய நிர்வாக செயலாளர் நியமனம்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய நிர்வாக செயலாளர் நியமனம்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய நிர்வாக செயலாளர் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

27 Nov, 2020 | 5:13 pm

Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று புதிய நிர்வாக செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்க செயலாளராக செயற்பட்ட சனத் வத்தேகெதர புதிய நிர்வாக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவினால் இன்று அவரிடம் நியமனக் கடிதம் கையளிக்கப்பட்டது.

தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டு அதிகார சபையின் முன்னாள் தலைவரான அவர், கண்டி தர்மராஜ கல்லூரியின் பழைய மாணவராவார்.

சனத் வத்தேகெதர ஊடகத்துறையில் மிகுந்த அனுபவம் பெற்றவர் என்பதுடன், பொதுச்சேவை, போக்குவரத்து மற்றும் விசேட செயற்றிட்ட அமைச்சுகளின் ஊடக செயலாளராகவும் செயற்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்