இலங்கைக்கு சுவிட்சர்லாந்து, IOM உதவி

வௌிநாடுகளிலுள்ள இலங்கை பணியாளர்களை நாட்டிற்கு அழைத்து வர IOM உதவி

by Staff Writer 27-11-2020 | 3:53 PM
Colombo (News 1st) COVID-19 தொற்று காரணமாக வௌிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கை பணியாளர்களை நாட்டிற்கு அழைத்து வர சுவிட்சர்லாந்து அரசும் இடம்பெயர்வு தொடர்பிலான சர்வதேச அமைப்பும் (IOM) உதவி வழங்கியுள்ளன. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுவுவதற்காக புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி RT-PCR பரிசோதனை இயந்திரத்தையும் 39,000 பரிசோதனை தொகுதிகளையும் வழங்குவதற்கு சுவிட்சர்லாந்து அரசும் IOM அமைப்பும் நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாடு திரும்பும் பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனைகளை அதிகரிக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான 150 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய பரிசோதனைத் தொகுதி சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.