பொலிஸ் மா அதிபராக C.D.விக்ரமரத்ன பொறுப்பேற்றார்

பொலிஸ் மா அதிபராக C.D.விக்ரமரத்ன பொறுப்பேற்றார்

பொலிஸ் மா அதிபராக C.D.விக்ரமரத்ன பொறுப்பேற்றார்

எழுத்தாளர் Bella Dalima

27 Nov, 2020 | 11:36 am

Colombo (News 1st) நாட்டின் 35 ஆவது பொலிஸ் மா அதிபராக C.D.விக்ரமரத்ன கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் அவர் தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.

கடந்த 1986 ஆம் ஆண்டு C.D.விக்ரமரத்ன பயிற்சி உதவி பொலிஸ் அத்தியட்சகராக சேவையை ஆரம்பித்தார்.

அவர் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரிகளில் பட்டம் பெற்றுள்ளார்.

C.D.விக்ரமரத்ன கடந்த வருடம் ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் ஒரு வருடத்திற்கும் அதிகக் காலம், பதில் பொலிஸ் மா அதிபராக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்