அஜித் தோவால் உள்ளிட்ட இந்திய பிரதிநிதிகள் குழு வருகை

அஜித் தோவால் உள்ளிட்ட இந்திய பிரதிநிதிகள் குழு வருகை

அஜித் தோவால் உள்ளிட்ட இந்திய பிரதிநிதிகள் குழு வருகை

எழுத்தாளர் Staff Writer

27 Nov, 2020 | 2:53 pm

Colombo (News 1st) இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உள்ளிட்ட இந்திய பிரதிநிதிகள் குழுவினர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இலங்கை, இந்தியா மற்றும் மாலைத்தீவுகளுக்கிடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அவர்கள் வருகை தந்துள்ளனர்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இலங்கைக்கு மேற்கொள்ளும் இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.

தேசிய பாதுகாப்பு ஆலோசனை மட்ட நான்காம் சுற்றுப் பேச்சுவார்த்தை இன்றும் (27) நாளையும் (28) கொழும்பில் இடம்பெறுகிறது.

பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் அழைப்பின் பேரில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அலோசகர் அஜித் தோவால் மற்றும் மாலைத்தீவுகளின் பாதுகாப்பு அமைச்சர் மரியா அஹ்மட் தீதி உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகள் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையை பங்களாதேஷ், மொரீஷியஸ், சீஷெல்ஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் மேற்பார்வை செய்யவுள்ளனர்.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், கடல் கொள்ளை ஆகியவற்றை தடுத்தல் தகவல் பரிமாற்றம் மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் குறித்து இந்த பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்