HIV-யால் கடந்த ஆண்டில் 3,20,000 குழந்தைகள் பலி

HIV தொற்றால் கடந்த ஆண்டில் மாத்திரம் 3,20,000 குழந்தைகள் உயிரிழப்பு: UNICEF அறிக்கை

by Bella Dalima 26-11-2020 | 3:12 PM
Colombo (News 1st) HIV தொற்றுக்கு கடந்த ஆண்டில் மாத்திரம் 3,20,000 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக UNICEF வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ஒவ்வொரு 100 விநாடிக்கும் ஒரு முறை குழந்தை அல்லது 20 வயதிற்குட்பட்ட இளைஞருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்ட மக்கள் தொகையில் தடுப்பு முயற்சிகள் மற்றும் சிகிச்சை முறைகள் ஆகியவை மிகக் குறைவாகக் காணப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் 50 சதவீதத்திற்கும் சற்றே குறைவாயுள்ள குழந்தைகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சைகளும் கிடைக்கப்பெற்றிருக்கவில்லை என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குழந்தைகள் இன்னும் எச்சரிக்கைக்குரிய விகிதங்களில் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் எய்ட்ஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்து வருகின்றனர் எனவும் UNICEFஅமைப்பின் செயல் இயக்குனர் கூறியுள்ளார். கொரோனா தொற்றால் HIV-க்கு அளிக்கும் முக்கிய சிகிச்சை முறை மற்றும் தடுப்பு முறைகள் தடைப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.