ஜோர்ஜ் ஸ்டூவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனத்தின் கோரிக்கை கடிதத்திற்கு MTV Channel பதில்

ஜோர்ஜ் ஸ்டூவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனத்தின் கோரிக்கை கடிதத்திற்கு MTV Channel பதில்

எழுத்தாளர் Staff Writer

26 Nov, 2020 | 6:24 pm

Colombo (News 1st) வரையறுக்கப்பட்ட ஜோர்ஜ் ஸ்டூவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனம் தமது சட்டத்தரணிகள் ஊடாக அனுப்பிய கோரிக்கை கடிதத்திற்கு, வரையறுக்கப்பட்ட MTV Channel தனியார் நிறுவனம் தமது சட்டத்தரணி G.G.அருள்பிரகாசம் ஊடாக பதில் அனுப்பியுள்ளது.

வரையறுக்கப்பட்ட ஜோர்ஜ் ஸ்டூவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனத்தின் தவறான, அநீதியான, வன்மமான செயற்பாடுகள் காரணமாக வரையறுக்கப்பட்ட MTV Channel தனியார் நிறுவனத்திற்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு 20 பில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அந்த பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரையறுக்கப்பட்ட MTV Channel தனியார் நிறுவனத்திற்கு எதிராக ஜோர்ஜ் ஸ்டுவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனம் ஒரு முக விளக்கத்தின் அடிப்படையிலான தடை உத்தரவைப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் கடந்த 23ஆம் திகதி நியூஸ்ஃபெஸ்ட் செய்தி வெளியிட்டது.

வரையறுக்கப்பட்ட ஜோர்ஜ் ஸ்டூவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனம் மற்றும் அதன் தலைவர், அந்த நிறுவனத்தின் முக்கிய ஊழியர்களுக்கு எதிராக அவதூறு செய்வதை வரையறுக்கப்பட்ட MTV Channel தனியார் நிறுவனம் தவிர்க்க வேண்டும் என அந்த ஒருமுக விளக்கத்தின் அடிப்படையிலான தடை உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.

இலங்கைக்கு rapid antigen பரிசோதனை தொகுதிகள் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பிலான செய்தி அறிக்கையிடலைத் தடுக்கும் வகையிலேயே இந்த ஒருமுக விளக்கத்தின் அடிப்படையிலான தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.

வரையறுக்கப்பட்ட MTV Channel தனியார் நிறுவனத்திற்கு குறித்த கோரிக்கை கடிதம் தனியார் தபால் சேவை ஊடாக கிடைப்பதற்கு முன்னதாகவே வரையறுக்கப்பட்ட ஜோர்ஜ் ஸ்டூவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனம் வரையறுக்கப்பட்ட MTV Channel தனியார் நிறுவனத்திற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்து, ஒருமுக விளக்கத்தின் அடிப்படையிலான தடை உத்தரவை பெற்றுக்கொண்டமை தொடர்பிலும் நியூஸ்ஃபெஸ்ட் செய்தி வௌியிட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்