கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மரணம்

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி திடீர் மரணம்

by Staff Writer 26-11-2020 | 12:39 PM
Colombo (News 1st) கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி இன்று காலை உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளை திடீரென உயிரிழந்துள்ளார். அவர் காலி முகத்திடலில் உடற்பயிற்சியில் ஈடுட்டிருந்த வேளையிலேயே திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் உயிரிழந்திருந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அவர் இருதய நோய்க்காக நீண்டகாலமாக சிகிச்சை பெற்று வந்துள்ளமை தெரியவந்துள்ளது.