கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

எழுத்தாளர் Staff Writer

26 Nov, 2020 | 5:41 pm

Colombo (News 1st) கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (27) முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை இந்த விடுமுறை அமுலில் இருக்கும் என கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் இன்று 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட 150 PCR பரிசோதனைகளில் 21 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்