RDA பெண் ஊழியரை தாக்கிய பொறியியலாளர் கைது

RDA பெண் ஊழியரை காரியாலயத்தில் தாக்கிய பொறியியலாளர் கைது 

by Staff Writer 25-11-2020 | 12:39 PM
Colombo (News 1st) மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உடுகம்பொல அலுவலகத்தின் பெண் ஊழியர் ஒருவரை தாக்கியமை தொடர்பில் தலைமை பொறியியலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (25) முற்பகல் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். அலுவலக பெண் ஊழியர் ஒருவரை தாக்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் நேற்று (24) வைரலாக பரவியது. இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய தலைமை பொறியியலாளரை பணி நீக்கம் செய்துள்ளதாக மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உபாலி கொடிகார குறிப்பிட்டார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.