வினைத்திறன் மிக்க ஒக்ஸ்ஃபோர்ட் தடுப்பு மருந்து

ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக தடுப்பு மருந்து வினைத்திறனானது என அறிவிப்பு 

by Staff Writer 24-11-2020 | 10:15 AM
Colombo (News 1st) ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து உயர் செயற்றிறன் மிக்கதென பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது. மக்களிடையே COVID -19 பரவுவதனை இந்த தடுப்பு மருந்து கட்டுப்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது. ஒக்ஸ்ஃபோர்ட் தடுப்பு மருந்து 70 வீத பாதுகாப்பை வழங்குவதாக இடைக்கால அறிக்கைகள் தெரிவிக்கின்ற போதிலும், 90 வீதத்திற்கும் அதிகமான பாதுகாப்பை அது வழங்குவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெற்றியாக கருதப்படுகின்ற போதிலும், Pfizer மற்றும் Moderna ஆகிய தடுப்பு மருந்துகள் 95 வீத பாதுகாப்பை வழங்குவது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் குறித்த இரு தடுப்பு மருந்துகளையும் விட ஒக்ஸ்ஃபோர்ட் தடுப்பு மருந்து மலிவானதும் களஞ்சியப்படுத்தி வைக்க இலகுவானதுமாகும். மேலும் உலகின் எப்பகுதியிலும் இதனை பெற்றுக்கொள்ளக் கூடியதாகவிருக்குமெனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் தயாரிக்கும் இந்த தடுப்பு மருந்து, ஒழுங்குபடுத்துநர்களால் அங்கீகரிக்கப்படுமிடத்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் பாரிய பங்காற்றுமெனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.