by Staff Writer 24-11-2020 | 3:52 PM
Colombo (News 1st) அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் கைதிகள் சிலர் கூரை மீதேறி நேற்று (23) ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கை இன்றும் தொடர்கின்றது.
கைதிகள் சிலரை தனிமைப்படுத்துவதற்காக குறித்த சிறைச்சாலைக்கு அழைத்து வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சிறைச்சாலைகளில் COVID - 19 கொத்தணியை கட்டுப்படுத்துவதற்காக பொது சுகாதார பரிசோதகர்கள் ஐவர் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய கூறியுள்ளார்.
சிறைச்சாலைகளில் இதுவரை 717 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.