நிலவிலிருந்து மாதிரிகளை சேகரிக்கவுள்ள சீன விண்கலம்

நிலவிலிருந்து மாதிரிகளை சேகரிக்கவுள்ள சீன விண்கலம்

by Staff Writer 24-11-2020 | 9:26 AM
Colombo (News 1st) சீனா முதல் தடவையாக விண்கலமொன்றை வெற்றிகரமாக நிலவுக்கு ஏவியுள்ளது. Chang'e-5 என பெயரிடப்பட்டுள்ள சீனாவுக்கு சொந்தமான விண்கலம் இன்று (24) அதிகாலை ஏவப்பட்டுள்ளது. நிலவை குறிக்கும் பழம்பெரும் சீன கடவுளின் பெயரை கொண்டதாக அமைந்துள்ள Chang'e-5 என்ற குறித்த விண்கலம் ரொக்கெட்டின் மூலம் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது. இந்த விண்கலம் வெற்றிகரமாக நிலவை சென்றடையும் பட்சத்தில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை தொடர்ந்து நிலவுக்கு விண்கலத்தை ஏவிய நாடுகளின் பட்டியலில் சீனா மூன்றாவது நாடாக இணைத்துக்கொள்ளப்படும். நிலவிலிருந்து 2 கிலோகிராம் நிறையுடைய மாதிரிகளை சேகரிக்கும் வகையில் குறித்த விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1976 ஆம் ஆண்டு நிலவுக்கு ஏவப்பட்ட விண்கலம் 179 கிராம் நிறையுடைய மாதிரிகளையும் மனிதன் சென்ற அப்பலோ விண்கலத்தின் மூலம் 382 கிலோகிராம் நிறையுடைய கற்கள் மற்றும் மண் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் மூலம் நிலவில் இதுவரை கால் பதிக்காத பகுதியான `ஓஷன் ஆஃப் ஸ்டார்ம்ஸ்` எனும் பகுதியிலிருந்து 2 கிலோகிராம் மாதிரிகளை சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. Chang'e-5 விண்கலம் மூலம் நிலவில் எரிமலைகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பது எவ்வாறு என்பது குறித்த விளக்கத்தையும் சூரியனின் கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கும் காந்த அலை எவ்வாறு சிதறியடிக்கப்படுகிறது என்பது குறித்த விளக்கத்தையும் புரிந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.