நியூஸிலாந்து கிரிக்கெட் தொடரிலிருந்து Fakhar Zaman நீக்கம்

நியூஸிலாந்து கிரிக்கெட் தொடரிலிருந்து Fakhar Zaman நீக்கம்

நியூஸிலாந்து கிரிக்கெட் தொடரிலிருந்து Fakhar Zaman நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2020 | 7:05 pm

Colombo (News 1st) பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் Fakhar Zaman நியூஸிலாந்து கிரிக்கெட் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு COVID – 19 தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி எதிர்வரும் நாட்களில் நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொள்ளவுள்ளது.

இரு அணிகளும் இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கவுள்ளன.

பாகிஸ்தான் அணியினால் Fakhar Zaman க்கு மேற்கொண்ட பரிசோதனைகளில் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்ற போதிலும், அறிகுறிகள் காணப்பட்டுள்ளதால் அவரை தொடரிலிருந்து நீக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும், Fakhar Zaman க்கு பதிலாக பிறிதொரு வீரர் இதுவரை பெயரிடப்படவில்லை எனவும் ஸிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் திறமையை வௌிப்படுத்திய Abdullah Shafique மற்றும் Haider Ali ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் திகதி ஒக்லண்டில் ஆரம்பாகும் போட்டித்தொடர் எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்