தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய மேலும் 62 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய மேலும் 62 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய மேலும் 62 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2020 | 11:30 am

Colombo (News 1st) முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாத குற்றச்சாட்டில் 24 மணித்தியாலங்களில் 62 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (24) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாத குற்றச்சாட்டில் 527 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 18 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்