எத்தியோப்பியாவில் போராட்டக்குழு சரணடைய காலக்கெடு விதிப்பு

எத்தியோப்பியாவில் போராட்டக்குழு சரணடைய காலக்கெடு விதிப்பு

எத்தியோப்பியாவில் போராட்டக்குழு சரணடைய காலக்கெடு விதிப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Nov, 2020 | 3:23 pm

Colombo (News 1st) எத்தியோப்பாவின் – திக்ரே மாநிலத்தில் போராட்டக்குழுவினர் சரணடைவதற்கு 72 மணித்தியால காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

எதியோப்பிய தலைநகரின் பல பகுதிகள் அரச படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் எத்தியோப்பிய பிரதமரினால் போராட்டக்குழுவினர் சரணடைவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

திக்ரே மக்கள் விடுதலை முன்னணி எனும் போராட்டக்குழுவினருக்கும் அரச படைகளுக்கும் இடையிலான உள்நாட்டு யுத்தம் வலுப்பெற்றுள்ளது.

குறித்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் ஆட்லரி போன்ற தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் எனவும் தலைநகர் மெகேலியிலுள்ள சுமார் 5 இலட்சம் மக்களுக்கு அரச படையினர் எ ச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வட எத்தியோப்பியாவில் வலுப்பெற்றுள்ள உள்நாட்டு மோதல் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

திக்ரே பிராந்தியத்திற்கு மனிதாபிமான மற்றும் நடுநிலையான மேற்பார்வையாளர்கள் தேவை என ஐ.நா. கடந்த வாரம் தெரிவித்திருந்ததுடன் மனிதாபிமான நெருக்கடிக்கு உள்நாட்டு யுத்தம் வழிவகுத்துள்ளதாக ஐ.நா. சுட்டிக்காட்டியிருந்தது.

யுத்தம் காரணமாக எத்தியோப்பியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அயல் நாடான சூடானுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்