by Staff Writer 22-11-2020 | 10:14 AM
Colombo (News 1st) கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது குழந்தையுடன் தப்பிச்சென்ற பெண் நேற்று (21) இரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
எஹலியகொடை ஹிந்துரங்கல பகுதியில் வைத்து அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கல்லேவ தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எஹலியகொடை பகுதியை சேர்ந்த தாய் ஒருவரே தனது இரண்டரை வயதுக்குக்கும் குறைந்த மகனுடன் தப்பிச் சென்றிருந்தார்.
இருவரும் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டநிலையில், இவர்கள் IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
குறித்த தாய் எஹலியகொடையில் உள்ள தமது வீட்டாரிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு தப்பியோடியதாக பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர்.
குறித்த பெண் 1500 மில்லிகிராம் ஹெரோயினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் என தெரியவந்துள்ளது.