தேசிய சுவடிகள் காப்பக திணைக்கள பொதுமக்கள் சேவை வரையறை 

தேசிய சுவடிகள் காப்பக திணைக்கள பொதுமக்கள் சேவை வரையறை 

தேசிய சுவடிகள் காப்பக திணைக்கள பொதுமக்கள் சேவை வரையறை 

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2020 | 6:55 pm

Colombo (News 1st) COVID – 19 தொற்று காரணமாக தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்தின் பொதுமக்கள் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சேவையை பெற்றுக்கொள்வதற்காக அலுவலகத்திற்கு வருகை தர முன்னர் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி நாள் மற்றும் நேரத்தை முன்பதிவு செய்துகொள்ளுமாறு தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, கொழும்பிலுள்ள தலைமை காரியாலயத்தின் 0112 696 917 அல்லது 0112 694 523 ஆகிய இலக்கங்கள் மற்றும் கண்டி அலுவலகத்தின் 0812 223 729 எனும் இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்