டொனால்ட் ட்ரம்ப் ஜூனியருக்கு கொரோனா தொற்று உறுதி

டொனால்ட் ட்ரம்ப் ஜூனியருக்கு கொரோனா தொற்று உறுதி

டொனால்ட் ட்ரம்ப் ஜூனியருக்கு கொரோனா தொற்று உறுதி

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2020 | 3:35 pm

Colombo (News 1st) அமெரிக்க ஜனாதிபதியின் மூத்த மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

42 வயதான அவருக்கு இந்த வார ஆரம்பத்தில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தினத்திலிருந்து டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் தமது விடுமுறை இல்லத்தில் தனிமையிலிருப்பதாகவும் பேச்சாளர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்பின் இளைய மகன் 14 வயதான Barron Trump க்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதுடன், அவர் மிக விரைவாக தொற்றிலிருந்து குணமடைந்திருந்ததை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்