இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பில் பரிசீலனை

இலங்கையின் இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பில் பரிசீலனை செய்யப்படும்: தினேஷ் குணவர்தன தெரிவிப்பு

by Staff Writer 20-11-2020 | 12:46 PM
Colombo (News 1st) இலங்கை தற்போது பின்பற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பில் பரிசீலனை செய்யப்படுமென வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த கலந்துரையாடலில் இத்தாலி, ஜெர்மன், நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இலங்கையில் நீண்ட கால இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் அவற்றின் மீதான தடைக்காலம் தொடர்பில் தௌிவுபடுத்துமாறு இதன்போது ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினால் கோரப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பரிமாற்ற நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலாத்துறையின் வருமான வீழ்ச்சியினால் நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார மற்றும் அந்நிய செலாவணி சிக்கல்கள் தொடர்பில் வௌிவிவகார அமைச்சரினால் இதன்போது தௌிவூட்டப்பட்டுள்ளது.