பொருளாதார வளர்ச்சி கண்டுள்ள வியட்நாம் 

இவ்வாண்டில் பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ள ஒரே தென்கிழக்கு ஆசிய நாடு

by Staff Writer 19-11-2020 | 5:02 PM
Colombo (News 1st) இவ்வாண்டு பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்த ஒரே தென்கிழக்கு ஆசிய நாடாக வியட்நாம் பதிவாகியுள்ளது. COVID-19 தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளைக் குறைத்து, பொருளாதார வளர்ச்சிப் பாதையில் வியட்நாம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வியட்நாமின் பொருளாதாரம் 2.4 வீத வளர்ச்சியை இவ்வாண்டு பதிவு செய்யுமென எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் வௌியிட்ட பிந்திய தரவுகளில் கூறப்பட்டுள்ளது. COVID-19 தொற்றையும் அதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளையும் கட்டுப்படுத்துவதற்கான பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொண்டமையே வியட்நாமின் வெற்றியென சர்வதேச நாணய நிதியம் பாராட்டுத் தெரிவித்துள்ளது. அங்கு இதுவரை 1288 கொரோனா நோயாளர்கள் மாத்திரமே பதிவாகியுள்ளதுடன், 35 பேர் உயிரிழந்துள்ளனர்.