யாழ். பல்கலைக்கழகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டரங்கு திறந்து வைப்பு

யாழ். பல்கலைக்கழகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டரங்கு திறந்து வைப்பு

யாழ். பல்கலைக்கழகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டரங்கு திறந்து வைப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Nov, 2020 | 9:02 pm

Colombo (News 1st) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நவீன உள்ளக விளையாட்டரங்கு இன்று திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான உள்ளக விளையாட்டு அரங்கு துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

பல்கலைக்கழக உடற்கல்வி துறை பணிப்பாளர் கே.கணேசநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்கலைக்கழக சமூகத்தை சேர்ந்த கல்விமான்களும் கலந்துகொண்டிருந்தனர்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, சுகாதார நடைமுறைகளுக்கமைய மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் திறப்பு விழா இடம்பெற்றது.

சுமார் 208 மில்லியன் ரூபா செலவில் ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் அமர்ந்திருக்கக்கூடிய வசதியைக் கொண்டுள்ள இந்த உள்ளக விளையாட்டரங்கு சர்வதேச தர நியமங்களுக்கமைய அமைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்