இவ்வாண்டில் பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ள ஒரே தென்கிழக்கு ஆசிய நாடு

இவ்வாண்டில் பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ள ஒரே தென்கிழக்கு ஆசிய நாடு

இவ்வாண்டில் பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ள ஒரே தென்கிழக்கு ஆசிய நாடு

எழுத்தாளர் Staff Writer

19 Nov, 2020 | 5:02 pm

Colombo (News 1st) இவ்வாண்டு பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்த ஒரே தென்கிழக்கு ஆசிய நாடாக வியட்நாம் பதிவாகியுள்ளது.

COVID-19 தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளைக் குறைத்து, பொருளாதார வளர்ச்சிப் பாதையில் வியட்நாம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வியட்நாமின் பொருளாதாரம் 2.4 வீத வளர்ச்சியை இவ்வாண்டு பதிவு செய்யுமென எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் வௌியிட்ட பிந்திய தரவுகளில் கூறப்பட்டுள்ளது.

COVID-19 தொற்றையும் அதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளையும் கட்டுப்படுத்துவதற்கான பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொண்டமையே வியட்நாமின் வெற்றியென சர்வதேச நாணய நிதியம் பாராட்டுத் தெரிவித்துள்ளது.

அங்கு இதுவரை 1288 கொரோனா நோயாளர்கள் மாத்திரமே பதிவாகியுள்ளதுடன், 35 பேர் உயிரிழந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்