32,700 மில்லியன் ரூபா செலவில் குடிநீர் திட்டம்

by Staff Writer 18-11-2020 | 6:46 PM
Colombo (News 1st) 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அனைவருக்கும் நீரை பெற்றுக்கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். களனி கங்கை வலது கரை நீர் விநியோக திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார். சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்திற்கு அமைய, 2025-இற்குள் அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான திட்டத்திற்கு ஏற்ப இது செயற்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா மக்கள் இந்த திட்டத்தினூடாக பயனடையவுள்ளனர். இந்த திட்டத்திற்காக 32,700 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினூடாக 1,20,000-இற்கும் மேற்பட்ட புதிய நீர் இணைப்புகளை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. COVID-19 நெருக்கடியால் நாட்டிற்கு ஏற்பட்ட சேதம் போரினால் ஏற்பட்ட சேதத்தை விட தீவிரமானது என பிரதமர் கூறியுள்ளார்.