அடிப்படைவாதத்தை மீளெழச் செய்யும் அனைத்து விடயங்களும் ஒடுக்கப்படும்: ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 18-11-2020 | 10:16 PM
Colombo (News 1st) வழமையான அரசியல் கலாசாரத்தை மாற்றி நாட்டுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்தவே நாட்டு மக்கள் தமக்கு ஆணை வழங்கியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ​தெரிவித்தார். மக்களின் அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி கூறினார். பதவியேற்று ஓராண்டு பூர்த்தியானதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார். தமது செயற்பாடுகள் வெற்றிகரமானதா, தோல்வியடைந்தனவா என்பதை தீர்மானிப்பதற்கான சிறந்த அளவுகோள் மக்களின் கருத்தென ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். மாறாக அரசியல் எதிர்த்தரப்பினர் சமூக வலைத்தளங்களில் பரப்பும் பொய் பிரசாரங்களை அடிப்படையாகக் கொண்டு அதனை தீர்மானிக்க முடியாது எனவும் அவர் கூறினார். பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியடைந்ததையொட்டி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போது இதனைக் குறிப்பிட்டார். தாம் பதவியேற்ற நாள் முதல் அநாவசிய ஆடம்பர செலவுகள் குறைக்கப்பட்டதாகவும் எந்த விதத்திலாவது அடிப்படைவாதத்தை மீளெழ செய்யும் அனைத்து விடயங்களும் ஒடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்திக் கூறினார். சிறைச்சாலைகளில் இருந்து போதைப்பொருளை கடத்தவோ, பாதாளக்குழுவினரை வழிநடத்தவோ எந்த சந்தர்ப்பமும் இல்லை எனவும் ஜனாதிபதி கூறினார். நாடு எதிர்நோக்கியுள்ள COVID-19 அபாயத்தில் இருந்து மீள்வதற்காக அனைவரும் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் ஜனாதிபதி தனது விசேட உரையின் போது வலியுறுத்தினார்.

ஏனைய செய்திகள்