போகம்பரை சிறையில் இருந்து கைதி தப்பியோட்டம்; ஒருவர் உயிரிழப்பு, மூவர் காயம்

போகம்பரை சிறையில் இருந்து கைதி தப்பியோட்டம்; ஒருவர் உயிரிழப்பு, மூவர் காயம்

போகம்பரை சிறையில் இருந்து கைதி தப்பியோட்டம்; ஒருவர் உயிரிழப்பு, மூவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

18 Nov, 2020 | 11:45 am

Colombo (News 1st) போகம்பரை பழைய சிறைச்சாலையில் இருந்து கைதிகள் தப்பிக்க முன்னெடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

அங்கு தனிமைப்படுத்தப்பட்டிருந்த கைதிகள் ஐவர் இன்று அதிகாலை மதில் மீதேறி தப்பிச்செல்ல முயன்றுள்ளனர்.

இதன்போது, அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தை சேர்ந்த 30 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இதன்போது, தப்பிச்சென்ற மற்றுமொரு கைதியை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தப்பிச்செல்ல முயன்ற கைதிகள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களென சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்