திருகோணமலையில் மனைவியை எரித்துக் கொலை செய்தவருக்கு மரண தண்டனை

திருகோணமலையில் மனைவியை எரித்துக் கொலை செய்தவருக்கு மரண தண்டனை

திருகோணமலையில் மனைவியை எரித்துக் கொலை செய்தவருக்கு மரண தண்டனை

எழுத்தாளர் Staff Writer

18 Nov, 2020 | 3:58 pm

Colombo (News 1st) திருகோணமலையில் தனது மனைவியை எரித்துக் கொலை செய்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்துள்ளார்.

திருகோணமலை – ஆண்டாங்குளம் பகுதியை சேர்ந்த 38 வயதான ஒருவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி கந்தளாய்-அக்போபுர பகுதியில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எரியூட்டி கொலை செய்தமை தொடர்பில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் சந்தேகநபருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியதால், அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்