திகனயில் சிறிய அளவில் நில அதிர்வு

திகனயில் சிறிய அளவில் நில அதிர்வு

எழுத்தாளர் Staff Writer

18 Nov, 2020 | 11:34 am

Colombo (News 1st) கண்டி – திகன பகுதியில் இன்று காலை 2.0 ரிக்டர் அளவிலான சிறு நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 9.28 மணியளவில் நிலஅதிர்வு பதிவானதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்தார்.

பல்லேகலயில் அமைந்துள்ள நில அதிர்வு கண்காணிப்பு மத்திய நிலையத்தில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் தலைவர் அனுர வல்பொல குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்