by Staff Writer 18-11-2020 | 12:19 PM
Colombo (News 1st) காலி நீதிமன்ற நடவடிக்கைகள் இன்று முதல் 03 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பூஸா சிறைக்கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த கைதியுடன் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக பழகிய இரண்டு சட்டத்தரணிகள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.