எத்தியோப்பியா உள்ளிட்ட 7 நாடுகளுக்காக ஐ.நா சபையால் நிதி ஒதுக்கீடு

எத்தியோப்பியா உள்ளிட்ட 7 நாடுகளுக்காக ஐ.நா சபையால் நிதி ஒதுக்கீடு

எத்தியோப்பியா உள்ளிட்ட 7 நாடுகளுக்காக ஐ.நா சபையால் நிதி ஒதுக்கீடு

எழுத்தாளர் Bella Dalima

18 Nov, 2020 | 12:37 pm

Colombo (News 1st) கொரோனா தொற்றுக்கு மத்தியில் பஞ்சத்தை தவிர்க்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

COVID-19 தொற்றுக்கு மத்தியில் மோதல்கள், பொருளாதார வீழ்ச்சி, காலநிலை மாற்றம் போன்றவற்றால் எதிர்நோக்கும் பஞ்ச அபாயத்தைத் தடுக்க ஐக்கிய நாடுகள் சபை அவசர நிதியை நேற்று வெளியிட்டது.

சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

எத்தியோப்பியா உள்ளிட்ட 07 நாடுகளுக்காக இந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.

குறித்த 07 நாடுகளில் எத்தியோப்பியா, ஆப்கானிஸ்தான், புர்கினா ஃபசோ, கொங்கோ குடியரசு, தென் சூடான், யேமன் ஆகிய நாடுகள் உள்ளடங்குகின்றன.

இந்த நாடுகளிடையே 80 மில்லியன் டொலர் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், எத்தியோப்பியாவில் நிலவி வரும் வறட்சி காரணமாக அங்கு பலர் பட்டினியை எதிர்நோக்கியுள்ளனர்.

இதனால் எத்தியோப்பியாவிற்கு மேலும் 20 மில்லியன் டொலர் நிதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்