வௌிநாடுகளிலிருந்து மேலும் 85 பேர் நாடு திரும்பினர்

வௌிநாடுகளிலிருந்து மேலும் 85 பேர் நாடு திரும்பினர்

by Staff Writer 17-11-2020 | 2:19 PM
Colombo (News 1st) வௌிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 85 இலங்கையர்கள் இன்று (17) தாயகம் திரும்பியுள்ளனர். துபாயிலிருந்து 26 பேரும் கத்தாரிலிருந்து 22 பேரும் தோஹாவிலிருந்து 37 பேரும் நாடு திரும்பியுள்ளதாக COVID - 19 தொற்று ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது. நாடு திரும்பியுள்ள அனைவருக்கும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் PCR  சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் பின்னர் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு இவர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இதேவேளை, முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 33 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 3281 பேர் கண்காணிக்கப்படுவதாக COVID - 19 தொற்று ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது. இதனிடையே நேற்று மாத்திரம் 10,713 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.