நாபானே பேமசிறி தேரர் இயற்கை எய்தினார்

by Staff Writer 17-11-2020 | 3:33 PM
Colombo (News 1st) இலங்கை ராமஞ்ஞ பீடத்தின் மகாநாயக்கர் நாபானே பேமசிறி தேரர் பேராதனை போதனாவைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தனது 98 ஆவது வயதில் இன்று (17) காலமானார். குறித்த மகாநாயக்க தேரர் இலங்கையில் பௌத்த தர்மத்தின் மேம்பாட்டிற்காக அளப்பரிய சேவையாற்றிய கல்விமானாவார். பௌத்த தர்மத்தின் வளர்ச்சிக்காக அரும் பணியாற்றிய நாபானே பேமசிறி தேரர், கல்வியில் சிறந்து விளங்கி பாண்டித்தியம் பெற்ற பிக்குகளின் பாரம்பரியத்தில் வந்துதித்தவர் ஆவார். 1922 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி நாபானே கிராமத்தில் பிறந்த தேரரின் இயற்பெயர் ஏக்கநாயக்க முதியான்சேலாகே டிக்கிரி பண்டாரவாகும். 1933 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 8ஆம் திகதி நாபானே பேமசிறி என்ற பெயரில் துறவு பூண்ட தேரர், 1943 ஆம் ஆண்டு உபசம்பதாவை பெற்றுக் கொண்டார். வௌ்ளவத்தை தர்மோதய பிரிவெனா, நிட்டம்புவ வித்தியானந்த பிரிவெனாவில் நாபான தேரர் பௌத்த சாஸ்திரத்தைக் கற்றுத் தேர்ந்தவராவார்.