தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 95 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 95 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 95 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2020 | 10:35 pm

Colombo (News 1st) தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 95 பேர் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொட்டாஞ்சேனை, வாழைத்தோட்டம், வத்தளை, ஜா-எல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் Drone கெமராக்களினூடாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

கொட்டாஞ்சேனையில் 29 பேரும் வாழைத்தோட்டம் பகுதியில் 21 பேரும் வத்தளையில் 19 பேரும் ஜா-எல பகுதியில் 26 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் தினமும் ட்ரோன் கெமராக்களினூடாக கண்காணிப்புகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

விமானப் படையினரின் உதவியுடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தனிமைப்படுத்தல் விதிமுறைகள் உரிய முநையில் பின்பற்றப்படும் பகுதிகளை விரைவாக தனிமைப்படுத்தலிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்