95 வீத பலனைத் தரும் COVID-19 தடுப்பூசி தயாரிப்பு

95 வீத பலனைத் தரும் COVID-19 தடுப்பூசி தயாரிப்பு: அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு

by Bella Dalima 16-11-2020 | 6:25 PM
Colombo (News 1st) COVID-19 தொற்றைத் தடுப்பதற்காக பரீட்சிக்கப்பட்ட புதிய தடுப்பூசி 95 வீத பலனை தருவதாக அமெரிக்க நிறுவனமான Moderna அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது தொற்றைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை மேலும் உருவாக்குவதாக சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன. அமெரிக்காவின் இரண்டு நிறுவனங்கள் இணைந்து ஆராய்ச்சிபூர்வமான தடுப்பூசியை தயாரித்துள்ளன. தடுப்பூசிக்கான சிறந்த பலன் கிடைத்துள்ளதாக ஆரம்ப கட்ட முடிவில் தெரியவருவதாக Moderna நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதுவொரு சிறந்த நாளென தெரிவித்துள்ள அந்நிறுவனம், அடுத்த வாரம் இதனை பயன்படுத்துவதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி சுமார் 30,000 பேரிடம் பரீட்சிக்கப்பட்டுள்ளது. இவர்களில் தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்த 11 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாகவும், எனினும் குறித்த நோயாளர்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.