தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: புத்தளம் சாஹிரா ஆரம்பக்கல்லூரி மாணவி தமிழ் மொழியில் முதலிடம்

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: புத்தளம் சாஹிரா ஆரம்பக்கல்லூரி மாணவி தமிழ் மொழியில் முதலிடம்

எழுத்தாளர் Staff Writer

16 Nov, 2020 | 8:24 pm

Colombo (News 1st) 2020 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் புத்தளம் சாஹிரா ஆரம்பக்கல்லூரியில் கல்வி பயிலும் எம்.ஏ. அதீபத் ஸைனா 199 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழியில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

யாழ். தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியின் மாணவி சுபாஸ்கரன் யனுஸ்கா தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 198 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி சிறிசங்கர் பவினயா 198 புள்ளிகளைப் பெற்று தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.

மாவட்டத்தில் முதலிடத்தையும் மாகாண ரீதியில் தமிழ் மொழியில் இரண்டாம் இடத்தையும் பவினயா பெற்றுக்கொண்டுள்ளார்.

2020 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் ஹட்டன் கல்வி வலயத்தில் இரண்டு மாணவர்கள் 196 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். இவர்கள் மாவட்ட ரீதியில் முதலிடத்தை சுவீகரித்துள்ளனர்.

அப்புகஸ்தென்ன தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி நந்தகுமார் நவிசனா 196 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.

டீசைட் தமிழ் வித்தியாலத்தில் கல்வி பயிலும் மதியழகன் சவிதரன் 196 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்