சிங்கராஜ வனாந்தரத்தை விஸ்தரிக்கும் வர்த்தமானி வௌியீடு: மைத்திரிபால சிறிசேன மகிழ்ச்சி

சிங்கராஜ வனாந்தரத்தை விஸ்தரிக்கும் வர்த்தமானி வௌியீடு: மைத்திரிபால சிறிசேன மகிழ்ச்சி

எழுத்தாளர் Staff Writer

16 Nov, 2020 | 7:21 pm

Colombo (News 1st) 11,000 ஹெக்டேராக இருந்த சிங்கராஜ வனாந்தரத்தை 36,474 ஹெக்டேராக விஸ்தரித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்ட வர்த்தமானி தற்போது அச்சிடப்பட்டு வௌியிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் பிறக்கவிருக்கும் பிள்ளைகளுக்காக இந்த உன்னதமான பூமியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த உலகை நேசிக்கும் தம்மைப்போன்ற இதயம் கொண்ட அனைவரும் இன்றைய நாளில் மகிழ்ச்சியடைய முடியும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

உலகிலுள்ள 10 பிரதான மழைக் காடுகளில் ஒன்றான சிங்கராஜ வனாந்தரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் தம்முடன் கருத்துக்களை பகிர்ந்த சூழலியலாளர்கள் மற்றும் சுற்றாடலை நேசிக்கும் உள்நாட்டினர், வௌிநாட்டினர் அனைவருக்கும் நன்றி கூறுவதாக மைத்திரிபால சிறிசேன தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்