ஒலிம்பிக் போட்டிகளில் பார்வையாளர்கள் பங்குகொள்வார்கள்: ஒலிம்பிக் சம்மேளனம் நம்பிக்கை

ஒலிம்பிக் போட்டிகளில் பார்வையாளர்கள் பங்குகொள்வார்கள்: ஒலிம்பிக் சம்மேளனம் நம்பிக்கை

ஒலிம்பிக் போட்டிகளில் பார்வையாளர்கள் பங்குகொள்வார்கள்: ஒலிம்பிக் சம்மேளனம் நம்பிக்கை

எழுத்தாளர் Bella Dalima

16 Nov, 2020 | 6:37 pm

Colombo (News 1st) எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பார்வையாளர்கள் பங்குகொள்வார்கள் என தாம் நம்புவதாக சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் நம்பிக்கை வௌியிட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த வருடம் ஜப்பானில் நடைபெறவுள்ளன.

இது குறித்து கலந்துரையாடுவதற்காக சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவர் Thomas Bach ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ளார்.

ஜப்பான் பிரதமர் Yoshihide Suga-வை சந்தித்த Thomas Bach இயன்றவரை அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அடுத்த வருடம் பார்வையாளர்கள் இடம்பெறுவர் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகள் இந்த வருடம் ஜூலை மாதம் டோக்கியோவில் நடைபெறவிருந்த போதிலும் கொரோனா தொற்று காரணமாக அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

2021 ஆம் ஆண்டு எவ்வாறான சூழல் அமைந்தாலும், ஒலிம்பிக் போட்டிகள் நிச்சயமாக நடைபெறும் என ஜப்பானின் ஒலிம்பிக் போட்டிகளுக்கு பொறுப்பான அமைச்சர் ஹாஷிமோட்டோ உறுதியளித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்