புறக்கோட்டை பஸ் நிலையங்கள் இன்று நள்ளிரவு முதல் திறப்பு 

by Staff Writer 15-11-2020 | 4:07 PM
Colombo (News 1st) கொழும்பு - புறக்கோட்டையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபை மத்திய பஸ் நிலையம் மற்றும் பெஸ்டியன் மாவத்தையில் அமைந்துள்ள பஸ் நிலையம் என்பன இன்று (15) நள்ளிரவு முதல் திறக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பயணிகளை ஏற்றவோ இறக்கவோ முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் நடவடிக்கை பிரிவு அத்தியட்சகர் ஏ.எஸ்.பீ. வீரசூரிய குறிப்பிட்டார். மாவட்டங்களுக்கு இடையிலான பஸ் சேவைகளை ஏனைய மாவட்டங்களில் இருந்து ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். இதன்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பஸ்கள் பயணித்தாலும், அங்கு பயணிகளை ஏற்றி, இறக்க முடியாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கமான்டர் திலான் மிருண்டா தெரிவித்துள்ளார். இந்த விடயங்களை கண்காணிப்பதற்காக இலங்கை போக்குவரத்து சபையின் கண்காணிப்பாளர்கள் நாடளாவிய ரீதியில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பஸ்களில் பயணிப்போர் முகக்கவசம் அணிதல் கட்டாயம் என்பதுடன், ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மாத்திரமே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் என கமான்டர் திலான் மிருண்டா குறிப்பிட்டார். இதேவேளை, பயணிகளின் தரவுகளையும் சேகரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கமான்டர் திலான் மிருண்டா சுட்டிக்காட்டியுள்ளார்.  

ஏனைய செய்திகள்