பஸ்கள் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவு 

ஆசன எண்ணிக்கையை விட அதிக பயணிகளுடன் பஸ்கள் பயணிப்பதாக முறைப்பாடுகள் 

by Staff Writer 15-11-2020 | 9:26 AM
Colombo (News 1st) கொரோனா தொற்று பரவுகின்ற நிலைமையிலும், நாட்டின் சில பகுதிகளில்  அதிக பயணிகளுடன் பஸ்கள் பயணிப்பதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனை கண்காணிப்பதற்காக குழுக்களை நியமித்துள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டா குறிப்பிட்டுள்ளார். சுகாதார வழிகாட்டல்களுடன், பஸ்களின் இருக்கைகளுக்கு ஏற்ப பஸ்கள் பயணிக்கின்றதா என்பது தொடர்பில் அதிகாரிகள் கண்காணிக்கவுள்ளனர். இதேவேளை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நிர்வகிக்கப்படும் பெஸ்ட்டியன் மாவத்தை பயணிகள் முனையம், கொட்டாவ போக்குவரத்து நிலையங்கள், தொற்று நீக்கம் செய்யப்பட்டதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம், மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகளை நாளை (16) முதல் மீண்டும் முன்னெடுப்பதற்கு தயாராகவுள்ளதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.