by Staff Writer 14-11-2020 | 2:53 PM
Colombo (News 1st) சிறைச்சாலைகளில் மேலும் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று (13) முன்னெடுக்கப்பட்ட PCR பரிசோதனைகளில் இவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.
போகம்பரை பழைய சிறைச்சாலையைச் சேர்ந்த 88 பேர் இதில் அடங்குகின்றனர்.
மேலும் 14 நோயாளர்கள் குருவிட்ட சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கிணங்க, சிறைச்சாலைகளில் இதுவரை அடையாளங்காணப்பட்டுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 285 ஆக அதிகரித்துள்ளது.
ஐந்து சிறைச்சாலை அதிகாரிகளும் COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய மேலும் தெரிவித்தார்.