சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் வௌியிட்டவர் கைது

சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை வௌியிட்டவர் கைது

by Staff Writer 14-11-2020 | 3:10 PM
Colombo (News 1st) வீதிகளில் வீழ்ந்து உயிரிழப்பவர்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை வௌியிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வதந்திகளை பரப்புபவர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். வீதிகளில் பலர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்து, அது குறித்த நிழற்படங்களுடன் தகவல்களை பதிவிட்ட ஒருவர், கடுகன்னாவ - எகொடவத்த பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக அஜித் ரோஹன கூறினார். 35 வயதான குறித்த நபர், வாகன திருத்துமிடமொன்றின் உரிமையாளர் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார். இது குறித்த மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். மக்களை வீணாக அச்சுறுத்தும் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.