அறிவிக்கப்பட்டுள்ள திகதிகளில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெறும்: கல்வி அமைச்சு

அறிவிக்கப்பட்டுள்ள திகதிகளில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெறும்: கல்வி அமைச்சு

அறிவிக்கப்பட்டுள்ள திகதிகளில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெறும்: கல்வி அமைச்சு

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2020 | 12:33 pm

Colombo (News 1st) கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான பாடவிதானங்கள் முழுமைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆய்வு செய்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஆசிரியர்கள், மாணவர்களிடமிருந்து இணையத்தளமூடாகவும் வலயக் கல்வி அதிகாரிகளிடமிருந்தும் தகவல்களை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

குறித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை நடத்தும் இறுதித் திகதி தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திகதிகளிலேயே பரீட்சையை நடத்த திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கூறினார்.

இதனடிப்படையில், எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்