ட்ரம்ப்பின் குற்றச்சாட்டை நிராகரிக்கும் அதிகாரிகள்

அமெரிக்க தேர்தலில் முறைகேடு ; குற்றச்சாட்டை நிராகரிக்கும் தேர்தல் அதிகாரிகள்

by Staff Writer 13-11-2020 | 12:56 PM
Colombo (News 1st) அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடு இடம்பெற்றிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டை அந்நாட்டு தேர்தல் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். 2020 ஜனாதிபதி தேர்தலானது, அமெரிக்க வரலாற்றில் இடம்பெற்ற பாதுகாப்பான தேர்தலாகும் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். வாக்களிப்பில் முறைகேடு இடம்பெற்றிருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை எனவும் அமெரிக்க தேர்தல்கள் குழு அறிவித்துள்ளது. தமக்காக அளிக்கப்பட்ட 2.7 மில்லியன் வாக்குகள் அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சுமத்தியுள்ளார். எனினும் அதற்கான ஆதாரங்களை அவர் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலில் தோல்வியடைந்தமையை அமெரிக்க ஜனாதிபதி இதுவரை ஏற்காத நிலையில், தேர்தலில் மோசடிகள் இடம்பெறவில்லை என அந்நாட்டின் உள்துறை பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.