இயல்பு வாழ்க்கைக்காக பிரார்த்திப்போம் – இந்து குருமார் அமைப்பு வேண்டுகோள்

இயல்பு வாழ்க்கைக்காக பிரார்த்திப்போம் – இந்து குருமார் அமைப்பு வேண்டுகோள்

இயல்பு வாழ்க்கைக்காக பிரார்த்திப்போம் – இந்து குருமார் அமைப்பு வேண்டுகோள்

எழுத்தாளர் Staff Writer

13 Nov, 2020 | 2:11 pm

Colombo (News 1st) உலக நாடுகள் கொரோனா தொற்றினால் பாரிய சவால்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், இம்முறை தீபாவளி பண்டிகையில் அனைவரின் இயல்பு வாழ்க்கைக்காகவும் பிரார்த்தனை செய்வோம் என இந்து குருமார் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வேலையின்மை, ஊதியமின்மை, நோய் பதற்றம் ஆகியவற்றால் இவ் வருடம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பட்டாசு வெடிப்பதிலோ அல்லது புத்தாடை அணிந்து மகிழ்வதையோ தவிர்த்து இவ்வேளையில், இருப்பதனை கொண்டு வாழ பழகுவோம் என இந்து குருமார் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் இயன்றவரை சுகாதாரத்துறை சார் நடைமுறைகளை கடைப்பிடித்து நாட்டையும் பாதுகாப்போம் என குறித்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்து இறைவனை மெய்யுருக கூட்டாக உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்வோம் எனவும் இந்து குருமார் அமைப்பு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்