ஹொங்கொங் கூட்டு இராஜினாமா தொடர்பில் சீனா விமர்சனம்

ஹொங்கொங் கூட்டு இராஜினாமா தொடர்பில் சீனா விமர்சனம்

ஹொங்கொங் கூட்டு இராஜினாமா தொடர்பில் சீனா விமர்சனம்

எழுத்தாளர் Staff Writer

12 Nov, 2020 | 4:33 pm

Colombo (News 1st) ஹொங்கொங் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக பதவி விலகியதை சீன அரசாங்கம் விமர்சித்துள்ளது.

அத்துடன் ஹொங்கொங் நிர்வாகத்திற்கு இது ஒரு ‘பரந்த சவால்’ எனவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

நேற்றைய தினம் (11) 15 ஜனநாயக ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியிருந்தனர்.

4 பாராளுமன்ற உறுப்பினர்களை ஹொங்கொங் அரசாங்கம் பதவி விலக்கியதை அடுத்து, ஒற்றுமையை வௌிக்காட்டும் வண்ணம் இவர்கள் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நால்வரும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கியதாக சீனா தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்