தேர்தல் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

by Staff Writer 12-11-2020 | 8:55 AM
Colombo (News 1st) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் (12) நிறைவடைகின்றது. 2015 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு நிறுவப்பட்டது. ஆணைக்குழுவின் தலைவராக மஹிந்த தேஷப்பிரிய செயற்பட்டதுடன் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நலின் அபேசேகர ஏனைய உறுப்பினர்களாக அங்கம் வகித்தனர். 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய புதிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 5 அங்கத்தவர்கள் நியமிக்கப்பட வேண்டும். எனினும் இதுவரை ஒருவரேனும் ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்படவில்லை. ஜனாதிபதியினால் பெயரிடப்படும் உறுப்பினர்கள் தொடர்பில் பாராளுமன்றத்தின் அனுமதி பெற்ற பின்னர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படவுள்ளனர்.