முகக்கவசங்களை அகற்றுவது தொடர்பில் ஆலோசனை கோவை

Face Mask உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை அகற்றுவது தொடர்பான ஆலோசனை கோவை வௌியீடு 

by Staff Writer 11-11-2020 | 12:11 PM
Colombo (News 1st) முகக்கவசம் மற்றும் கையுறைகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுப் பொருட்களை அகற்றுவது தொடர்பில் ஆலோசனை கோவை வௌியிடப்பட்டுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் இந்த ஆலோசனை கோவை வௌியிடப்பட்டுள்ளதுடன் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளிலும் இருந்து வௌியேற்றப்படும் மேற்குறிப்பிட்ட மருத்துவ கழிவுகளை அகற்றும் முறைமை தொடர்பில் தௌிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில், மருத்துவ கழிவு முகாமைத்துவத்திற்காக பிரத்தியேக வாகனம் மற்றும் ஊழியர்களை சேவைகளில் ஈடுபடுத்துமாறு உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, COVID - 19 நோயாளர்கள் பயன்படுத்தும் முகக்கவசங்கள் மற்றும் கையுறைகளை மஞ்சள் நிறத்திலான பைகளுக்குள் இட்டு கழிவுகள் அகற்றப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களினால் பயன்படுத்தப்படும் முகக்கவசங்கள் மற்றும் கையுறைகள் என்பன வீசப்படுவதற்கு முன்னர், அவை நன்றாக கழுவப்பட வேண்டுமெனவும் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் வௌியிடப்பட்டுள்ள ஆலோசனை கோவையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.    

ஏனைய செய்திகள்