2021 வரவு செலவு திட்ட விவாதத்தை 19 நாட்களுக்கு நடத்த தீர்மானம் 

2021 வரவு செலவு திட்ட விவாதத்தை 19 நாட்களுக்கு நடத்த தீர்மானம் 

2021 வரவு செலவு திட்ட விவாதத்தை 19 நாட்களுக்கு நடத்த தீர்மானம் 

எழுத்தாளர் Staff Writer

11 Nov, 2020 | 5:27 pm

Colombo (News 1st) 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பான விவாதத்தை 19 நாட்களுக்கு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையின் இன்று (11) கூடிய பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழுவின் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்றத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரை வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தின் இரண்டாம் வாசிப்பு இடம்பெறுமென பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் 23 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் குழுநிலை விவாதம், டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி நிறைவடையுமெனவும் அன்றைய தினம் மாலை 05 மணிக்கு வரவு செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்