தொற்றா நோயாளர்களை பாதுகாப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை

தொற்றா நோயாளர்களை பாதுகாப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை

தொற்றா நோயாளர்களை பாதுகாப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை

எழுத்தாளர் Staff Writer

11 Nov, 2020 | 9:04 pm

Colombo (News 1st) தொற்று நோய் அல்லாத நோய்களால் பீடிக்கப்பட்டுள்ளவர்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இலங்கையிலும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களில் 93 வீதமானோர் தொற்றுநோய் அல்லாத நோய்களால் பீடிக்கப்பட்டவர்களென வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மாரடைப்பு, நீரிழிவு, சிறுநீரக நோய் மற்றும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு மிக வேகமாக கொரோனா தொற்று பரவுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் அவர்களில் பெரும்பாலானோர் நோய் அறிகுறிகள் இன்றிய நிலையில் உயிரிழப்பதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் நடத்தப்படும் PCR பரிசோதனைகளிலேயே அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், நிலைமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி தொற்றுநோய் அல்லாத நோய்களால் பீடிக்கப்பட்டுள்ளவர்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்தல் தொடர்பில் ஆலோசனை மற்றுமம் தௌிவுபடுத்தப்பட வேண்டியது அவசியமென ஜனாதிபதி கூறியுள்ளார்.

கொவிட் தொற்று ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கலந்துரையாடல் இன்று (11)  முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற போதே ஜனாதிபதி இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்