கன்சியூலர் பிரிவின் சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பம் 

கன்சியூலர் பிரிவின் சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பம் 

கன்சியூலர் பிரிவின் சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பம் 

எழுத்தாளர் Staff Writer

11 Nov, 2020 | 8:56 am

Colombo (News 1st) வௌிவிவகார அமைச்சின் கன்சியூலர் அலுவலக சேவைகளை இன்று (11) முதல் மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கன்சியூலர் பிரிவின் ஆவணங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இவ்வாறு ஆரம்பிக்கப்படவுள்ளதாக வௌிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், பொதுமக்கள் 0112 338 812 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி அல்லது consular.mfa.gov.lk என்ற இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து முற்கூட்டியே தமக்கான தினங்களை பதிவு செய்து கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

கன்சியூலர் பிரிவு நாளாந்தம் காலை 10 மணி தொடக்கம் மாலை 02 மணி வரை வரையறுக்கப்பட்ட மக்கள் தொகையுடன் திறக்கப்பட்டிருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள மக்கள் கன்சியூலர் பிரிவுக்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனிடையே, மாத்தறை மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள பிராந்திய கன்சியூலர் அலுவலகங்கள் வேலைநாட்களில் வழமை போன்று திறக்கப்பட்டிருக்குமென வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்